வாடியா இமயமலை நிலவியல் நிறுவனம்
வாடியா இமயமலை நிலவியல் ஆய்வு நிறுவனம், இந்தியாவின் இமயமலையில் காணப்படும் இயற்கை வளங்கள் குறித்து ஆய்வு செய்யும் தன்னாட்சி பெற்ற இந்திய அரசின் நிறுவனம் ஆகும். புகழ்பெற்ற இமயமலை நிலவியல் ஆய்வாளாரான தாராஷா நோஷெர்வான் வாடியா பெயரில் இந்நிறுவனத்திற்கு வாடியா இமயமலை நிலவியல் நிறுவனம் எனப்பெயரிடப்பட்டது. இந்நிறுவனம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வாடியா இமயமலை நிலவியல் ஆய்வு நிறுவனம் இயங்குகிறது. இதன் பணி இமயமலையின் நிலவியலை ஆய்வு செய்து இயற்கை வளங்களை தேடுவதாகும். சூன் 1968ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையின் கீழ் நிறுவப்பட்ட இந்நிறுவனம், பின்னர் ஏப்ரல் 1976ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தின் தேராதூன் நகரத்திற்கு மாற்றப்பட்டது.
Read article